நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்த தாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கடினமான ஆடுகளங்களில் வெலிங்டனும் ஒன்று. உலகின் அதிக காற்று வீசும் நகரமாக திக ழும் வெலிங்டனில் காற்றின் தாக்கத்தை சமாளிப்பது தான் பேட்ஸ்மேன்களுக்கும். பந்து வீச்சாளர்களுக்கும் மிகப்பெ ரிய சவாலாக இருக்கும். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் காற்றில் பந்து எதிர்பாராதவிதமாக திசை மாறி வரும் போது கணித்து ஆடுவது சிரமமாக இருக்கும். புற்கள் மற்றும் ஈரப்பதம் காரணமாக முதல் இரு நாட்களில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு சாதகமாக இருக்கும். அதன் பிறகு பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். அதனால் தான் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆடுகள சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வீரர்களே இங்கு சாதிக்க முடியும்.
1930-ம் ஆண்டு முதல் இதுவரை வெலிங்டன் பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் 70 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 24-ல் வெற்றியும். 22-ல் தோல்வியும், 24-ல் டிராவும் கண்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தி யாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி பிரன்டன் மெக்கல்லத்தின் முச்சத்தோடு 680 ரன்கள் குவித்தது இந்த மைதானத் தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே நியூசிலாந்து 1946-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
இந்திய அணி இங்கு இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5-ல் தோல்வியும், 2-ல் டிராவும் சந்தித்துள்ளது. கடைசியாக 2020-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையில் கால்ப தித்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணிக்கு அந்த ஒரே வெற்றி 1968-ம் ஆண்டில் கிடைத்தது. மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையில் சென்ற இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு இங்கு வாகை சூடி 58 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை சுப்மன் கில் தலைமையிலான இந்திய படை தணிக் குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.