கிரிக்கெட்

இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான தொடர்: 3 போட்டிகள்... நியூசிலாந்து 'ஏ' அணி அறிவிப்பு

இந்திய ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மூன்று நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

கிறைஸ்ட்சர்ச்,

இந்திய ஏ அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான நியூசிலாந்து ஏ அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நாளை தொடக்கம்

இந்திய ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மூன்று நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை தொடங்கும் இந்தத் தொடர், நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளன.

ரிஸ் மரியு கேப்டன்

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து ஏ அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரிஸ் மரியு முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக செயலபடுகிறார். 3-வது போட்டிக்கான கேப்டன் பின்னர் அறிவிக்கப்படுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டிக்கான நியூசிலாந்து ஏ அணி

ரிஸ் மரியு (கேப்டன்), மேட் பாய்ல், மேக்ஸ் சூ, கிரிஸ்டியன் கிளார்க், டீன் பாக்ஸ்கிராப்ட், ஜாக் கிப்சன், மிட்ச் ஹே, கர்டிஸ் ஹீபி, சைமன் கீன், ஜேடன் லெனாக்ஸ், ஜாரோத் மெக்கே, டிம் ராபின்சன், பிரேசர் ஷீட்.

2-வது போட்டிக்கான அணி

ரிஸ் மரியு (கேப்டன்), மேட் பாய்ல், கிரிஸ்டியன் கிளார்க், மேட் பிஷர், டீன் பாக்ஸ்கிராப்ட், ஜாக் கிப்சன், மிட்ச் ஹே, கர்டிஸ் ஹீபி, சைமன் கீன், ஜேடன் லெனாக்ஸ், ஜாரோத் மெக்கே, டிம் ராபின்சன், பிரேசர் ஷீட்.

3-வது போட்டிக்கான அணி

அடி அசோக், மேட் பாய்ல், மேக்ஸ் சூ, டீன் பாக்ஸ்கிராப்ட், கர்டிஸ் ஹீஃபி, சைமன் கீன், நிக் கெல்லி, பென் லிஸ்டர், ரிஸ் மரியு, ஜாரோத் மெக்கே, கேமரூன் பால், ஹென்றி நிக்கோல்ஸ், பிரேசர் ஷீட்.

இந்தியா ஏ அணி

இந்தியா ஏ அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், ஆகிப் நபி, ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக ரிஷப் பந்த் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக குமார் குஷாக்ரா சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது போட்டியில் பந்த் விளையாடுவது அவரது உடற்தகுதியைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

போட்டி அட்டவணை

முதல் போட்டி: அக்டோபர் 24–27 - பெர்ட் சட்க்ளிப் ஓவல், லிங்கன்

இரண்டாவது போட்டி: அக்டோபர் 31 - நவம்பர் 3 - ஹாக்லி ஓவல், கிறைஸ்ட்சர்ச்

மூன்றாவது போட்டி: நவம்பர் 7–10 - பெர்ட் சட்க்ளிப் ஓவல், லிங்கன்

SCROLL FOR NEXT