கிறிஸ்ட்சர்ச்,
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பிலெண்டல் 53 ரன்களுடனும், கிளேன் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.