கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் கான்வே

நம்பர் ஒன் இடத்தில் உள்ள கனே வில்லியம்சன் 376 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 449 இன்னிங்ஸ்களில் விளையாடி 19,292 ரன்களை குவித்திருக்கிறார்.

ஹாமில்டன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் தேவோன் கான்வே 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். ஹாமில்டனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அவர் 60 ரன்கள் (40 பந்துகள் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார். அப்போது இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் மொத்தம் 143 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 164 இன்னிங்ஸ்களில் விளையாடி 6,025 ரன்களை சேர்த்திருக்கிறார். இவற்றில் 12 சதங்களும், 32 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 227 ரன்களை எடுத்திருக்கிறார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் வரிசையில் கான்வே 16-வது வீரராக உள்ளார். நம்பர் ஒன் இடத்தில் கனே வில்லியம்சன் உள்ளார். அவர் 376 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 449 இன்னிங்ஸ்களில் விளையாடி 19,292 ரன்களை குவித்திருக்கிறார். அவர் 48 சதங்களும் 103 அரை சதங்களும் எடுத்துள்ளார். அதிக அளவாக 251 ரன்கள் எடுத்திருக்கிறார்.