கிரிக்கெட்

வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

லாகூர்,

சமீபத்தில் நடந்த 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிதனது பிரிவில் 3-வது இடம் பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளானதுடன், அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்ததால் அந்த அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 லட்சம் அபராதம் விதிக்கபட்டதாக செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் அமிர் மிர் கூறுகையில்,

'எந்தவொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. வீரர்கள் சிறப்பாக செயல்படும் போது நிறைய ஊக்கத் தொகையை பெறு கிறார்கள். தற்போது வீரர்கள் ஆண்டுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 5-6 கோடி சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் சரி யாக செயல்படாவிட்டால் அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வாரியம் யோசித்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்றார்.