மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் அணியை தலைமை தாங்குகிறார். சூர்யவன்ஷி, அசோக் சர்மா, பிரம்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். உலகக்கோப்பை டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை.
இது தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ரகானே கூறியதாவது,
2026 டி20 உலக கோப்பை ஹீரோ சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாதது விசித்திரமாக உள்ளது.இதற்கான காரணத்தை பிசிசிஐ அவரிடம் முறையாக கூறியிருக்கும் என நம்புகிறேன். சஞ்சுவை சீக்கிரமே இந்திய அணியில் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளேன். என தெரிவித்துள்ளார்.