கிரிக்கெட்

'ரோகித் செய்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது' - சுப்மன் கில் பாராட்டு

நியூசிலாந்து அணி, 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆக்லாந்து,

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் துல்லியமான ரன் அவுட்டை பாராட்டியுள்ளார்.

வெற்றி

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் டிம் சீபெர்ட் 38 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 30 ரன்களும், பிளேர் டிக்னர் 34 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. விராட் கோலி 74 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

ரோகித்தின் ரன் அவுட்

இந்த வெற்றிக்குப் பிறகு கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், ’இந்திய அணியின் பந்துவீச்சும், பீடிங்கும் சிறப்பாக இருந்ததாக நினைக்கிறேன். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி வந்த நிலையில், ரோகித் சர்மா செய்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி’ என்றார்.

SCROLL FOR NEXT