ராய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆர்.சிபி அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.
கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் ரசிகர்கள்
மட்டுமின்றி ஆர்.சிபி வீரர்களும் ஆக்ரோஷமாக கொண்டாடினர். பெங்களூரு வீரர் டிம் டேவிட் ஆபாச சைகை காட்டி கொண்டாடினார்.
இந்த நிலையில், ஆபாச சைகை காட்டி கொண்டாடிய டிம் டேவிட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆபாச சைகை பயன்படுத்தியது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் படி அவருக்கு 2 டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டது.