கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 297 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்துள்ளது.

டர்பன்,

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்துள்ளது. டெம்பா பவுமா 30 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்னும் எடுத்தனர். மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். மார்கோ யான்சென் அவர் 59 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT