நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் 13ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் இடங்களில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கெனவே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தொடக்க வீரராக விளையாடுவதில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதால் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது