துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி அணிகளின் வரு டாந்திர புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் படி ஒரு புள்ளியை இழந்துள்ள இந்திய அணி (118 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (113) 2 புள்ளி அதிகரித்து 2-வது இடத்திலும், உலக சாம்பியன் ஆஸ்திரேலியா (109) 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றன.
தென்ஆப்பிரிக்க அணி (102) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி (98) ஒரு இடம் சறுக்கி 5-வது இடம் பெற்றுள்ளது. 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.