கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா

ஒருநாள் போட்டி அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய 'ஏ' கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பய ணம் செய்து இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான முதலா வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 29-ந் தேதியும் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய 'ஏ' அணி நேற்று அறிவிக்கப்பட் டது. ஒருநாள் போட்டி அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார். தசைபிடிப்பால் கடந்த மே மாதம் முடிந்த ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு எந்தவொரு போட் டியிலும் பங்கேற்காத ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியை எட் டுவதை பொறுத்து இதில் ஆடுவது உறுதியாகும். இதே போல் காயத்தில் இருந்து மீண்டுள்ள தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அணிக்கு தேர்வாகியுள்ளார். அணிகள் விவரம் வருமாறு:-

இந்திய 'ஏ' டெஸ்ட் அணி: தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்).அமன் மொகடே, ஆயுஷ் பாண்டே, யாஷ் ரத்தோட், ஷேக் ரஷீத். குமார் குஷாக்ரா, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷூல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என்.ஜெகதீசன், நசிகெட் புதே, வைஷாக்.

இந்திய 'ஏ' ஒருநாள் அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்சன், ரஜத் படிதார், குமார் குஷாக்ரா, நிஷாந்த் சிந்து, விப் ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் திர், ஹர்திக் பாண்ட்யா, பிரப்சிம்ரன் சிங், குர்ஜப்னீத் சிங், யாஷ் தாக்குர்.

SCROLL FOR NEXT