ஆக்லாந்து,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது. இந்தத் கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 11அன்று கயானாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் 3 ஒருநாள் போட்டிகள் கயானாவில் நடைபெறும். மேலும் 2 போட்டிகள் பார்படாசில் நடைபெறும்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), டாம் லாதம், மிட்ச் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மேத்யூ பிஷர்(வரம்பற்றவர்), டீன் ஃபாக்ஸ்கிராப்ட், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், வில் யங்.