கிரிக்கெட்

மார்ஷ், ஹெட் ரீ-என்ட்ரி... ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

மெல்போர்ன்,

ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஒருநாள் போட்டிகள்

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேலும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது.

2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அணியை வலுப்படுத்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மார்ஷ், ஹெட் ரீ-என்ட்ரி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடாத மிட்செல் மார்ஷ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி

மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் (தென் ஆப்பிரிக்க தொடருக்கு மட்டும்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனலி, ஜோயல் டேவிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க் (தென் ஆப்பிரிக்க தொடருக்கு மட்டும்), ஆடம் ஜாம்பா.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 15 - ஹராரே

2-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 18 - ஹராரே

3-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 20 - ஹராரே

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 24 - டர்பன்

2-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 27 - ஜோகன்னஸ்பர்க்

3-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 30 - போட்செப்ஸ்ட்ரூம்.

SCROLL FOR NEXT