கிரிக்கெட்

ஒருநாள் தொடர்: தர்மசலா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள் தர்மசாலா சென்றடைந்தனர்.

தர்மசாலா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் தர்மசாலாவில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் தர்மசாலா சென்றடைந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ இணையத்தில் வெளியிட்டுள்ளது.