லண்டன்,
ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்ததும் இங்கிலாந்துஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மெல்போர்னில் ஜனவரி 14ந் தேதி நடக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கி சர்ச்சைக்கு ஆளானதால் டெஸ்ட் தொடரில் இருந்து கழற்றி விடப்பட்ட ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இரவு விடுதி பிரச்சினையின் போது உடனிருந்த பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹாலெஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வலுவான அணியை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகி இருக்கிறார். ஆனால் இரவு விடுதி விவகாரத்தில் போலீஸ் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதை பொறுத்து தான் பென் ஸ்டோக்ஸ் அணியில் ஆடுவாரா? என்பது தெரியவரும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி வருமாறு:
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ்பட்லர், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ்வோக்ஸ், மார்க்வுட்.