கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: மார்ஷ் விலகல்; இங்லிஸ் சேர்ப்பு

ஆல்-ரவுண்டரான இங்லிஸ், ஐ.பி.எல். தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 563 ரன்கள் எடுத்துள்ளார்.

புதுடெல்லி

பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற உள்ள 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த தொடர் 30-ந்தேதி தொடங்கி நடைபெறும். எனினும், காலில் ஏற்பட்ட காயத்தினால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸ் கேப்டனாக இருப்பார். ஆல்-ரவுண்டரான இங்லிஸ், ஐ.பி.எல். தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 563 ரன்கள் எடுத்துள்ளார்.

2024-ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஒன்றிலும் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய கேப்டனாக இங்லிஸ் செயல்பட்டார். ஐ.பி.எல்.லில் பஞ்சாப்புக்கு எதிராக நடந்த கடைசி போட்டியிலும் மார்ஷ் விளையாடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.