துபாய்,
மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதியில் வங்காளதேச, இந்தியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், “இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இல்லையென்றால், ஆசியக் கோப்பையை வெல்வது பற்றி கனவு காணக்கூடாது என்று வங்காளதேச வீராங்கனை ஷர்மின் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற வலுவான அணியை எதிர்கொள்ளும்போது அழுத்தத்தை விட, தங்களது திறமை மீது நம்பிக்கை வைப்பதே முக்கியம்.
இந்திய அணியின் முக்கிய பலம் பேட்டிங் என்றும், வங்கதேசத்தின் பலம் பந்துவீச்சு .தங்களது பந்துவீச்சுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவை வீழ்த்த முடியும். இந்தியாவை வெல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தால்தான் ஆசியக் கோப்பையை வெல்லும் கனவையும் காண முடியும்.என தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம், யுஏஇ-க்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.