மும்பை,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கொல்கத்தாவில் நாளை இரவு 7 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குரூப்1-ல் இருந்து 2-வது அணி யாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன் திலக் வர்மா கூறியதாவது,
ஒரு அணியாக அதிக ரன் குவிப்பதை எதிர்நோக்குகிறோம். 'பவர்-பிளே'யில் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அதிரடியாக ஆடும் பாணியை மாற்றக்கூடாது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்போது தான் 3, 4-வது மற்றும் 5-வது வரிசை பேட்டர்கள் அதே நம்பிக்கையுடன் தொடருவார்கள். அந்த வகையில் சஞ்சு சாம்சன் (24 ரன்) அருமையான தொடக்கத்தை தந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார்கள் என்ற அச்சத்தை எதிரணி பந்து வீச்சாளர்களிடம் பார்க்க விரும்புகிறோம். அந்த மனநிலையுடன் தான் இந்த ஆட்டத்தில் விளையாடினோம். ஜிம்பாப்வே ஆட்டத்துக்கு முன்பாக சிறந்த மனநிலையுடன் களத்திற்கு செல்வது குறித்தும், உற்சாகமாக விளையாடுவது குறித்தும் விவாதித் தோம். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக நாம் எப்படி டி20கிரிக்கெட்டை விளையாடி வெற் றிகளை குவித்தோம், எத்தகைய நிலைமை இருந்தாலும் ஒரு தனிநபராக மகிழ்ச்சியோடு உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள் என்று அறிவுறுத்தினார். கடந்த கால ஆட் டங்களின் வீடியோ மற்றும் கம்பீர் அளித்த உத்வேகம் சாதிக்க உதவி யது.
இவ்வாறு திலக் வர்மா கூறினார்.