பெர்த்,
பெர்த்தில் வருகிற 6-ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காயங்கள் காரணமாக பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய வீராங்கனைகளின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது
கிம் கார்த் தசைப்பிடிப்பு காயம் காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து, சோபி மோலினக்ஸ் முதுகு வலி காரணமாக இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எலிஸ் பெர்ரி தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டு வரும்நிலையில், அவர் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை விளையாடினாலும், அவர் பந்துவீசாமல் ஒரு பேட்டராக மட்டுமே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, இதுவரை சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகாத (Uncapped) ரேச்சல் ட்ரென்னமன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மெய்ட்லான் பிரவுன் ஆகிய இரு புதிய வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சோபி மோலினக்ஸ் விலகியதையடுத்து, ஆஸ்திரேலிய அணியை அலிசா ஹீலி மீண்டும் வழிநடத்த உள்ளார்.