கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு

இந்த முறை கூடுதலாக 8 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), 2026-27ஆம் ஆண்டுக்கான புதிய மத்திய ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாபர் அசாம், சல்மான் அலி ஆஹா உள்ளிட்ட மொத்தம் 38 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த முறை கூடுதலாக 8 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களின் போட்டி வடிவங்களின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பிரிவில் பாபர் அசாம், சல்மான் அலி ஆஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தகுந்த வகையில் பல வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 19 வீரர்களுக்கு வளர்ச்சிப் பிரிவின் கீழ் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்களான முகமது ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் ஆகியோர் புதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இவர்களுடன் சைம் அயூப், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபிக், முகமது ஹாரிஸ், ஹசன் அலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கும் இந்த முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. புதிய ஒப்பந்த முறை மூலம் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதுடன், வீரர்களின் தற்போதைய செயல்பாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT