ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த 2-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. முத லில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. ஹசன் நவாஸ் (79 ரன்), ஆல்-ரவுண்டர் அரா பத் மின்ஹாஸ் (59 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 38.4 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
டாப்-3 வீரர்கள் டாம் பான்டன் (57 ரன்), பென் டக்கெட் (45 ரன்), ஜோ ரூட் (33 ரன்) ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்தும் பின் வரிசை வீரர்கள் சொப்பலால் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அராபத் மின்ஹாஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.