லாகூர்,
8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 29ம் தேதி நடந்த லாகூர் கலாண்டர்சுக்கு எதிரான ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 129 ரன் இலக்கை 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்ன தாக கடைசி ஓவரில் கராச்சியின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்ட போது, லாகூர் வீரர்கள் பஹர் ஜமான், கேப்டன் ஷகீன் ஷா அப்ரிடி, வேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் பந்தை கையில் வைத்துக் கொண்டு ஒன்று கூடி ஆலோ சித்தனர். சந்தேகப்பட்ட நடுவர்கள் பந்தை வாங்கி பார்த்த போது அது சேதப்படுத்தப்பட்டி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்க ளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ரன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பஹர் ஜமானிடம் போட்டி நடுவர் ரோஷன் மகனாமா நடத்திய விசாரணையில் அவர் பந்தின் தன்மையை மாற்றியது உறுதியா னது. இதனால் பஹர் ஜமானுக்கு இரண்டு பி.எஸ்.எல்.ஆட்டங்களில் விளை யாட தடை விதிக்கப்பட்டது.