வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB), பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வங்காளதேசத்தில் இந்த முத்தரப்பு தொடரை நடத்துவதற்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கூட்டத்தின்போது இந்த யோசனையை பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்களிடம் வங்காளதேசம் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பாக முத்தரப்பு போட்டியை நடத்துவதன் மூலம் ஆசிய கோப்பைக்கான அணி
இந்த முன்மொழிவுக்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தொடரில் பங்கேற்பது குறித்து இரு நாடுகளும் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இதனால் முத்தரப்பு தொடருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்படவில்லை. 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 18 முதல் ஜூலை 4-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பாக முத்தரப்பு போட்டியை நடத்துவதன் மூலம் ஆசிய கோப்பைக்கான அணிகளின் தயாரிப்புக்கு உதவ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது