லாகூர்,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. லாகூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய இறுதிப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.