லாகூர்,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. லாகூரில் உள்ள மைதானத்தில் மாலை 5 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற பாகிஸ்தானும், முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.