கிரிக்கெட்

பில் சால்ட் அரைசதம்: டெல்லி அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

பில் சால்ட் அரைசதமடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார்

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்க ளூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் பெங்களூரு அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். விராட் கோலி 19 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பில் சால்ட் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

பில் சால்ட் அரைசதமடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் படிதார் 8 ரன்கள் , டிம் டேவிட் 26 ரன்கள் எடுத்தார்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.