கிரிக்கெட்

நியூசிலாந்து வானிலையை சமாளிக்க வீரர்கள் தயாராக வேண்டும்: மோர்கல்

பந்துவீச்சில் துல்லியத்தைக் கடைப்பிடிப்பதும் சவாலாக இருக்கலாம்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வரும் இந்திய அணிக்கு, அந்நாட்டின் வெல்லிங்டன் உள்ளிட்ட நகரில் வீசும் கடுமையான காற்று புதிய சவாலாக அமைந்துள்ளது. வெலிங்டனில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 120 கி.மீ. வரை சென்றுள்ளது. இதனால் மைதானத்தில் வீரர்கள் சமநிலையைப் பேணுவதும், பந்துவீச்சில் துல்லியத்தைக் கடைப்பிடிப்பதும் சவாலாக இருக்கலாம்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தென்னாப்பிரிக்க அணியுடன் நியூசிலாந்துக்குச் சென்றபோது, அங்குள்ள காற்றின் தன்மையைத் தானும் அனுபவித்தேன். இரண்டு முதல் நான்கு நாட்கள் பயிற்சி செய்தாலும் அத்தகைய காற்றுக்குப் முழுமையாகப் பழகிவிட முடியாது. எனவே, வீரர்கள் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு மனதளவில் தயாராக வேண்டும்.

வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் காற்று திடீரெனத் திசை மாறக்கூடும். இதனால் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது உடல் சமநிலையைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படலாம். பந்துவீச்சாளர்களுக்கும் பந்தின் திசை, வேகம் மற்றும் துல்லியத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகலாம். குறிப்பாக, காற்றை எதிர்த்து பந்துவீச வேண்டிய சூழலில் சில வீரர்கள் கூடுதல் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இந்திய அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் இந்தச் சவாலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT