மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர்.
சமீபத்தில் ஹோம் ஆஃப் ஹீரோஸ் நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் டெஸ்ட் போட்டிகள் நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், " டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது. மக்கள் 20 ஓவர் கிரிக்கெட் பார்க்க விரும்புகிறார்கள். வீரர்களும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையே விளையாட விரும்புகிறார்கள்
ஒரே நாளில் 20 ஓவர் கிரிக்கெட் விளையாடி 50 லட்சம் பெறுபவர்கள் ஏன் ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஐந்து லட்சம் ரூபாய் பெற விரும்ப போகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆகாத வீரர்கள் இன்று ரூ.7-10 கோடி பெறுகிறார்கள்" என யுவராஜ் பேசினார்.