மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் கடந்த மாதம் நடந்தது. இதில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்கள் குவித்து 4-வது இடம் பிடித்தது. பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.
இந்த நிலையில் பாரா ஆசிய விளையாட்டில் சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியிடம் நேற்று நேரில் வாழ்த்து பெற்றனர்.
இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது:-
உங்களுடைய பிரமாதமான செயல்பாடு விளையாட்டு உலகில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை காட்டுகிறது. நீங்கள் பதக்கங்களை மட்டும் வெல்லவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை யும் வென்றுள்ளீர்கள். உங்களது போராட்டங்களும், சாதனைகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கின்றன. 2010-ம் ஆண்டில் 14 பதக்கம் வென்றோம். 14-ல் இருந்து 114 பதக்கங்களை எட்டியது உங்களது கடின உழைப்பின் உச்சமாகும். முன்பு பெற்றோர். தங்கள் பிள்ளைகளை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த அச்சப்பட்டனர். திறமைகளை ஊக்குவிக்காத இந்த அமைப்பை மாற்ற முடியாது என்று மக்கள் கருதினர். ஆனால் நீங்கள் எப்படி மனம் தளராாமல் போராடி வெற்றி பெற்றீர்களோ, அதே போல் நாங்களும் எங்களது இலக்கை அடைவதில் முழுமையாக கவனம் செலுத்தினோம். நமது இளைஞர்களின் திறமை வீணாகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். உங்க ளது முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த அமைப்பை மாற்ற தீர்மானித்தோம்.
கடந்த காலங்களில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்த விளையாட்டு பிரிவுகளில் இப்போது வலுவ டைந்து வருகிறோம். தடகளம், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன். ஜூடோ என பலவிளையாட்டுகளில் இளம் திறமையாளர்களை கண்டறிந்து வருகிறோம். புதிய சாம்பியன்களை உருவாக்குகி றோம். ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர்களில் 61 பேர் முதல்முறையாக பங்கேற்றவர் கள். அதில் 36 பேர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.