கிரிக்கெட்

கடும் போராட்டம் நிறைந்த தொடராக இருக்கும்: புஜாரா

மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனேகமாக ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்படும்.

புதுடெல்லி,

இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த ஒரு பேட்டியில், 'இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் என்பதே எனது கணிப்பு. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஒரு இந்திய அணியும், கடைசி இரு ஆட்டங்களில் வேறொரு இந்திய அணியும் விளையாட உள்ளது. எனவே நியூசிலாந்துக்கே சற்று சாதக மான சூழல் நிலவுகிறது. ஏனெனில் இந்தியா 5 போட்டிகளில் ஒரே மாதிரி யான அணியுடன் விளையாடப்போவதில்லை. இருப்பினும் முதல் 3 ஆட்டங் களில் இந்திய அணியே சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். கடைசி இரு ஆட்டங்கள் சவாலாக இருக்கலாம். ஆனால் இது கடும் போராட்டம் நிறைந்த தொடராக இருக்கும். நியூசிலாந்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனேகமாக ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்படும்.

சதம்

இந்த தொடரில் ரோகித் சர்மா. விராட் கோலி ஆகியோரில் யாருக்கு சதம் அடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கிறீர்கள். ரோகித் சர்மா, தொடக்க வீராக களமிறங்கி பவர்-பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கம் தரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் நியூசிலாந்து ஆடுகள் சூழலில் அவரது ஆட்ட அணுகுமுறை மாறலாம். விராட் கோலி 3-வது வரிசையில் களம் கண்டு, தனது இன்னிங்சை வலுவாக நிலைநிறுத்தி ஆடக்கூடியவர். ஒரு நாள் போட்டியில் 3-வது வரிசையில் களம் இறங்கும் பேட்டருக்கு சதம் அடிப்பது சற்று எளிதானது. எனவே ரோகித்தை விட கோலிக்கே சதம் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்' என்றார்.

ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் சுப்மன் கில் தலைமையிலும், கடைசி இரு ஆட்டங்களில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலும் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT