சண்டிகர்,
2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 முதல் 2024-ம் ஆண்டு வரை இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பராஸ் மாம்ப்ரே, அப்போது தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்பட்டார்.
இவரது பயிற்சிக் காலத்தில், 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடரில் கோப்பையைக் கைப்பற்றியது.
இதுவரை இரண்டு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. 2014-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும், 2025-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடமும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
2026-ம் ஆண்டு தொடரில் பஞ்சாப் அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. முதல் 7 போட்டிகளில் தோல்வியடையாமல் விளையாடி 6 வெற்றிகளைப் பதிவு செய்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்தது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.