சண்டிகர்,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. 3 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 3 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் 1 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.