Image Courtesy : Twitter @IPL 
கிரிக்கெட்

ஐபிஎல் : டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் சுற்றில் நீடிக்க இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT