கிரிக்கெட்

ஐதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நியூ சண்டிகாரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.