சென்னை,
முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
8 அணிகள் இடையிலான 10-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது.
இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.