லாகூர்,
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்வி மற்றும் ஒழுங் கீன புகார்கள் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ் வான், இமாம் உல்-ஹக், சல்மான் ஆஹா உள்பட 7 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதுடன் உடனடியாக தாயகம் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் வீரர்களின் ஓய்வறை ரகசியங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரின் பேரில் முகமது ரிஸ்வான், இமாம் உல்-ஹக் ஆகியோரிடம் அந்த நாட்டின் தேசிய சைபர் கிரைம் குற்றப்பிரிவு முகமை சுமார் 4 மணி நேரம் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிக்க அவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். இவ்விரு வீரர்கள் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு முகமை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.