டெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெல்லியில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித் தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில், புது டெல்லியில் நடக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலையில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மைதானத்தில் உள்ள நவீன வடிகால் அமைப்பு காரணமாக போட்டி முழுமையாக பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.