கிரிக்கெட்

மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன.

இந்த போட்டி தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தி யன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 27 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து துருவ் ஜூரேல் , தசுன் ஷனகா இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். துருவ் ஜூரேல் 38 ரன்களும், தசுன் ஷனகா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆர்ச்சர் 32 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 205 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் சாஹர், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணி தொடக்கம் முதல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் மட்டும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர்.

சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா 34 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.