கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்களும் , ஜெய்ஸ்வால் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் ஆட்டத்தில் முன் னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந் திக்கின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்களும் , ஜெய்ஸ்வால் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் பின்னர் ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி , கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.