கிரிக்கெட்

மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 205 ரன்கள் எடுத்தது.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறுவது யார்? என்பது இன்று தெரியவரும்.

இந்த போட்டி தொடரில் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) லீக் சுற்று ஆட் டம் முடிவடைகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான்ராயல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 27 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து துருவ் ஜூரேல் , தசுன் ஷனகா இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர்.

அதில் துருவ் ஜூரேல் 38 ரன்களும், தசுன் ஷனகா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆர்ச்சர் 32 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 205 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.