ஐதராபாத்,
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் ஐதராபாத் திரும்பிய திலக் வர்மாவை தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார்.
இதையடுத்து PEDDI திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ராம் சரணை சந்தித்து திலக் வர்மா வாழ்த்து பெற்றார். அப்போது திலக் வர்மாவுக்கு ராம் சரண் பேட் ஒன்றை பரிசளித்தார்.