பிளாஸ்பூர்,
92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் 2-வது சுற்றில் முன் னாள் சாம்பியனான மும்பை- இமாசலபிரதேசம் (டி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் பிளாஸ்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இமாசலபிரதேசம் 140 ரன்னில் முடங்கியது. மும்பை 8 விக்கெட்டுக்கு 528 ரன்கள் குவித்து டிக்ளேர் செய் தது. 388 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இமாசலபிரதேசம் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இமாசலபிரதேச அணி 99.1 ஓவர்களில் 291 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி இன்னின்ஸ் மற்றும் 97 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் மொகித் அவஸ்தி 5 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே, ஷம்ஸ் முலானி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் அரியானாவை வருகிற 26-ந் தேதி சந்திக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் (சி பிரிவு) கேரள அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.
கர்நாடகா- சவுராஷ்டிரா, புதுச்சேரி- மத்தியபிரதேசம் இடையிலான ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.