கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அபாரம்...சண்டிகார் அணி 94 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’

இதன் 4-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் 'எலைட்" பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதன் 4-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

தமிழக அணி

இதில் சண்டிகாரில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு- சண்டிகார் (டி பிரிவு) அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 7 விக் கெட்டுக்கு 571 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் முதல் இன் னிங்சை தொடங்கிய சண்டிகார் அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சண்டிகார் அணி, தமிழக வீரர்க ளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.3 ஓவர்களில் 94 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தமிழக அணி தரப்பில் சோனு யாதவ் 4 விக்கெட்டும், சரவணகுமார். சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெற்றி பெறுவது

பாலோ-ஆன் கொடுக்கப்பட்டதால் 477 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட் செய்த சண்டிகார் அணி ஆட்ட நேரம் முடிவில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்களுடன் தள்ளாடுகிறது. தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் அஜித் ராம் 4 விக்கெட்டும். சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

SCROLL FOR NEXT