கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெங்கால்- ஆந்திரா அணி கள் மோதின.

கொல்கத்தா,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு வங்காள மாநிலம் கல் யாணியில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால்- ஆந்திரா அணி கள் மோதின.

இதில் முதல் இன்னிங்சில் ஆந்திரா 295 ரன்னும், பெங்கால் 629 ரன்னும் எடுத்தன. 334 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன் னிங்சை ஆடிய ஆந்திரா 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி 72.2 ஓவர்களில் 244 ரன்னில் ‘ஆல்-அவுட்' ஆனது. நிதிஷ் குமார் ரெட்டி 90 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பெங்கால் அணி இன் னிங்ஸ் மற்றும் 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.