கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை: அரியானா அணியை வீழ்த்தியது மும்பை

எலைட் குரூப் டி பிரிவில் மும்பை அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை,

மும்பை- அரியானா அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற அரியானா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 430 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரகுவன்ஷி, மூஷீர் கான் ஆகியோர் சதமடித்து அசத்தினர். தனுஷ் கோட்டியான் அரை சதம் கடந்தார்.

ரகுவன்ஷி, முஷீர் கான் சதம்

அரியானா சார்பில் சமந்த ஜாகர் 3 விக்கெட்டும், அமன் குமார், பர்த் வாட்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய அரியானா அணி முதல் இன்னிங்சில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் நிஷாந்த் சிந்து சதமடித்தார். தீரு சிங் 45 ரன்னும், அன்கித் ராஜேஷ்குமார் 35 ரன்னும் எடுத்தனர்.

மும்பை அணி சார்பில் முஷீர் கான் 6 விக்கெட்டும், தனுஷ் கோட்டியான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 160 ரன் முன்னிலை பெற்றதால் அரியானாவுக்கு மும்பை அணி பாலோ ஆன் கொடுத்தது. தொடர்ந்து ஆடிய ரெயில்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹிமான்ஷு ரானா 46 ரன்னும், நிஷாந்த் சிந்து 44 ரன்னும், சமந்த ஜாகர், அனுஜ் தாக்ரல் தலா 40 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தனுஷ் கோட்டியான் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முஷீர் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை வெற்றி

இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 10.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ரகுவன்ஷி அதிரடியாக ஆடி 39 பந்தில் 67 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 6 விக்கெட்ட்டும், 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் எடுத்த முஷீர் கானுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன் மூலம் எலைட் குரூப் டி பிரிவில் மும்பை அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT