கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை: பிரதோஷ் ரஞ்சன் பால் சதம்... முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் தமிழ்நாடு

பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

சண்டிகர்,

ரஞ்சி கோப்பை தொடரில் சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி வலுவான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு - சண்டிகர்

ரஞ்சி கோப்பை தொடரின் 2026-27 சீசனில், தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று தொடங்கியது. சண்டிகரில் உள்ள செக்டர் 16 மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக விமல் குமார், என். ஜெகதீசன் களமிறங்கினர்.

விமல் குமார் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ஜெகதீசன் 52 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதன்பிறகு பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பிரதோஷ் ரஞ்சன் பால்

சிறப்பாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் சதம் அடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய பாபா இந்திரஜித் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 13 ரன்களில் வெளியேறினார்.

இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவில் தமிழ்நாடு அணி 86 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்துள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்களுடனும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT