கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்

தமிழக அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து தடுமாறுகிறது.

ஜெய்ப்பூர்,

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் 'எலைட்' குரூப்பில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங் கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவி லும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் முன்னாள் சாம்பியன்களான தமிழ்நாடு- ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (டி பிரிவு) ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 2-வது நாளான நேற்றும் தொடர்ந்து ஆடியது. கரண் லம்பா 113 ரன்னிலும், மஹிபால் லோம்ரோர் 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் நிலைக்கவில்லை. ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 115.3 ஓவர்களில் 363 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சரவணகுமார். தீபேஷ் தலா 3 விக்கெட்டும். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட சாய் சுதர் சன் 3 ரன்னில் சேத்தன் ஷர்மா பந்து வீச்சில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன்பால், தொடக்க வீரர் ஜெகதீசனுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அரைசதத்தை எட்டினாலும், தங்களது இன் னிங்சை பெரிதாக மாற்றவில்லை. ஜெகதீசன் 55 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன்பால் 58 ரன்னிலும் அஜய் சிங் சுழலில் சிக்கினர். பாபா இந்திரஜித் 26 ரன்னில் வீழ்ந்தார்.

ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து தடுமாறுகிறது. ஆந்த்ரே சித் தார்த் 21 ரன்னுடனும், சோனு யாதவ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT