ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (வயது 27). ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர்கள் உள்பட உலகளவில் பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் கலக்கி வரும் ரஷித் கான், சர்வதேச அளவில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்குகிறார். மாயாஜால சுழற்பந்து மற்றும் கூக்ளி பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் கொண்ட ரஷித் கான், தன்னுடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நிர்வாகிகள் தனக்கு தங்கள் நாட்டு குடியுரிமை அளிக்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷித் கான் இது தொடர்பாக கூறியதாவது:
“இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரியின் விருப்பத்தின் பேரில் அவரை நான் சந்தித்தேன். அவர் என்னிடம், ‘உங்கள் நாடான ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் இந்தியாவிலேயே தங்கிவிடுங்கள். அதற்கான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் தருகிறோம். இங்கேயே வாழ்ந்து, இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுங்கள்’ என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. பின்னர் புன்னகையுடன், ‘மிக்க நன்றி, ஆனால் நான் எனது தாய்நாடான ஆப்கானிஸ்தானுக்காகவே விளையாடுகிறேன்’ என்று அதனை மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.