கிரிக்கெட்

வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

டெல்லியில் நேற்று நடந்த 28-வது லீக் ஆட் டத்தில் (டி பிரிவு) ஆப்கானிஸ்தான் அணி, ஐக் கிய அரபு அமீரகத்தை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த அமீரகம் 9 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோகைப் கான் 68 ரன்கள் (48 பந்து, 6 பவுண்டரி, 4 சிக் சர்) எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் வேகப் பந்து வீச்சாளர் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 4 விக் கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகு மான் 2 விக்கெட்டும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆப்கானிஸ்தான் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ரஷித் கான் ஒரு விக்கெட் எடுத்த போது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச மற்றும் லீக் போட்டிகளை சேர்த்து) அவரது விக்கெட் எண்ணிக்கை 700-ஆக (518 ஆட்டம்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை அடைந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ (631 விக்கெட்) 2-வது இடத்திலும், சுனில் நரின் (613 விக்கெட்) 3-வது இடத்திலும் உள்ளனர்.